நேட்டோ மாநாட்டில் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும்.! நேட்டோ செயலாளர்.! - Seithipunal
Seithipunal


நேட்டோ மாநாட்டில் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும் என நேட்டோ செயலாளர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையான போர் 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யா படைகள் கிழக்கு மாகாணத்தை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

உக்ரைன் படைகளுடன் நேட்டோ படைகளும் இணைந்து எதிர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய படைகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இம்மாத இறுதியில் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடக்கவுள்ள நேட்டோ மாநாட்டில் உக்ரைனுக்கு உதவி ஆயுத தொகுப்பு வழங்கும் முடிவுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நேட்டோ செயலாளர் ஜெனரல் ஸ்டோல்டென்பர்க் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் மீதான போர் நீண்ட காலம் நீடிக்கும் எனவும், தற்போது வழங்கும் ஆயுத தொகுப்பு டான்பாஸ் பகுதியை ரஷ்ய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க உதவும் என்று ஜெர்மன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NATO summit will approves arms assistance to Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->