உக்ரைனுக்கு அளிக்கப்படும் நேட்டோவின் ஆதரவை ஒருபோதும் உடைக்க முடியாது.! ஸ்பெயின் பிரதமர்.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து  வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு, ஐரோப்பா மற்றும் நேட்டோ நாடுகள் பொருளாதாரத்திலும், ஆயுத தேவைகளிலும் முழு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைனுக்காண நேட்டோவின் ஆதரவை ஒரு போதும் உடைக்க முடியாது என ஸ்பெயின் நாட்டின் பிரதமர் சான்செஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் அப்பாவி மக்களின் மரணங்கள் என சர்வதேச சட்டத்தை மீறும் ரஷ்ய அதிபர் புதின் செயலை கண்டிக்க கட்டாயப்படுத்துவதாக அறிவித்துள்ளார். மேலும் புதின் ஒருபோதும் அவருடைய நோக்கத்தை அடைய மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரஷ்யாவினால் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், உக்ரைனுக்கு ஆதரிப்பதே ஐரோப்பாவிற்கும், உலக நாடுகளுக்கும் எதிர்காலம் இருப்பதை உறுதி செய்யும் ஒரேவழி என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NATO support to Ukraine cannot be broken Spain PM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->