போர் எதிரொலி.! போலாந்து வான் எல்லையில் பறந்து சென்ற நேட்டோ போர் விமானங்கள்.!
NATO warplanes flew in Poland border as war tension continues
நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், 8 மாதங்களாக போர் நீடித்து வருகிறது.
இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களையும் அளித்து உதவி வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், நேட்டோ நாடுகளின் கிழக்குப் பகுதியில் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு பகுதியாக ரஷ்யாவின் அண்டை நாடான போலந்து வான் எல்லையில் நேட்டோ நாடுகளான இத்தாலியின் யூரோ ஃபைட்டர்கள் அமெரிக்காவின் எஃப்-22 போலந்தி எஃப்-16 மற்றும் மிக்-29 போர் விமானங்கள் வானில் பறந்து சென்றன.
English Summary
NATO warplanes flew in Poland border as war tension continues