அமெரிக்கா || நடுரோட்டில் மருமகளை சுட்டுக் கொன்ற மாமனார்.. அடுத்தடுத்து அரங்கேறும் பயங்கரம்!
near america
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் பகுதியைச் சேர்ந்தவர் குர்பிரீத் கவுர் தோசன்ஜ். இவரின் மாமனாரான சீத்தல் சிங் தோசன்ஜ் (74) என்பவர், தனது மருமகளை வால்மார்ட் கடையில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
இந்த வழக்கில் போலீசார் சீத்தல் சிங்கை கைது செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் தெரிவித்ததாவது, "குர்பிரீத் சிங் கடைசியாக தனது மாமாவிடம் தொலைபேசி வழியாக பேசியுள்ளார்.
அப்போது, சீத்தல் சிங் தன்னை கொல்ல வருகிறார் என்று அச்சத்துடன் குர்பிரீத் கவுர் அலறியுள்ளார். அவர் பேசிய சில நிமிடங்களில் குர்பிரீத் கொல்லப்பட்டு உள்ளார். இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவுகள் கிடைத்து உள்ளன.
இந்த ஆதாரத்தின் அடிப்படையில், சீத்தல் சிங்கை பிரெஸ்னோவில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
அண்மையில், அமெரிக்காவில் பஞ்சாப்பை சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட நான்கு பேர் கொண்ட இந்திய குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு கொலை சம்பவம் நடந்துள்ளது.