பிரான்சில் பரபரப்பு.! பாடம் எடுத்த ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்ற மாணவன் கைது.! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டில் உள்ள செயிண்ட் ஜீன்-டி-லுஸ் என்ற கடற்கரை நகரில் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில், 50 வயதுடைய ஆசிரியை ஆக்னஸ் லாஸ்லே பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, அவரை பதினாறு வயதுடைய மாணவன் ஒருவன் திடீரென கத்தியால் குத்திவிட்டு வகுப்பை விட்டு வெளியேறி உள்ளார். 

இதில் ஆசிரியை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அந்த மாணவன் பக்கத்து வகுப்பறையில் உள்ள ஆசிரியரிடம் சென்று நடந்ததைக் கூறி கத்தியை ஒப்படைத்துள்ளான். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். 

இதையடுத்து போலீசார் அந்த மாணவனிடம் விசாரணை நடத்தியதில், அந்த மாணவன் தனக்கு பேய் பிடித்துள்ளதாகவும், அந்த பேய் தான் தன்னிடம் ஆசிரியை ஆக்னஸை குத்தி கொலை செய்யச் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மாணவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near france student kill teacher in classroom


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->