வரதட்சணைக்காக மனைவியை தீவைத்து எரித்த தீயணைப்பு வீரர்.! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!
near maharastra fire man arrested for wife kill
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் முல்லுண்டை பகுதியைச் சேர்ந்தவர் லக்கன் கெய்க்வாட். இவர் ஒரு தீயணைப்பு படை வீரர். இவர் மனைவி மனிஷா.
இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது, மனைவி மனிஷாவிடம் கூடுதலாக ரூ.1 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி அவருடைய கணவர் லக்கன் உள்பட அவரது குடும்பத்தினர்கள் வற்புறுத்தி வந்தனர்.
ஆனால், இதற்கு மனிஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை சித்ரவதை செய்து, அவர் மீது தின்னரை ஊற்றி தீ வைத்து எரித்தனர். இதில், மனிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கணவர் லக்கன் கெய்க்வாட்டை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் கீதா சர்மா ஆஜராகி வாதாடினார்.
இறுதியில், கெய்க்வாட் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு சாகும் வரையில் கடுங்காவல் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி ஏ.பி சர்மா உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அவரது குடும்பத்தினர் நான்கு பேர் மீது குற்றம் தொடர்பான எந்த ஆதாரமும் இல்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
English Summary
near maharastra fire man arrested for wife kill