மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தாயமொழி உதவுகிறது - குடியரசுத்தலைவர் முர்மு.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் ஜெயதேவ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் பேசியதாவது, 

"கல்வி என்பது ஒருவருக்கு அதிகாரம் அளிப்பதற்கான கருவி என்பதனால், நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மட்டத்தில் இருந்தும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் கல்வி கிடைப்பதற்கு முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். 

அனைவருக்கும் எளிதாக கல்வி கிடைக்கும் வகையில் அமைந்த மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் பாராட்டத்தக்க ஒன்று. தொழில்நுட்பக் கல்வியை ஆங்கிலத்தில் புரிந்து கொள்வதற்கு மாணவர்கள் சிரமப்படுவதனால், தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்குவதற்காக தேசியக் கல்விக் கொள்கையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு அவரவர்களின் தாய்மொழி உதவுகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்பது அவர்களிடையே ஆக்கப்பூர்வ சிந்தனையை உருவாக்குவதுடன், பகுப்பாய்வுத் திறனையும் மேம்படுத்தும். 

அதேபோல், நகரம் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இடையே சமமான வாய்ப்புகளையும் வழங்கும். தொழில்நுட்பக் கல்விக்கு, மாநில மொழிகளில் பாடநூல்கள் கிடைக்காததன் காரணமாக முந்தைய காலத்தில் தொழில்நுட்பக் கல்வியை பயிற்றுவிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. இந்த சிரமத்தை நீக்குவதற்காக மேற்கொண்ட அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் முயற்சிகள் பாராட்டத்தக்கது ஆகும்"  என்று அவர் தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near odisa President Drarubathi Murmu apeach in meeting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->