பிலிப்பைன்ஸை புரட்டி எடுத்த மழை - 6 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கடந்த 25 ஆம் தேதி உலகமே கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் மட்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. 

ஓய்வில்லாமல் பெய்த மழையால் நாட்டிலுள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 

இந்த மழை வெள்ளத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை ஆறு பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பத்தொன்பது பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Near philiphains six peoples died for rain and floods


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->