தாய்லாந்தில் புயலில் சிக்கிய போர்க்கப்பல் -  6 மாலுமிகளின் உடல் மீட்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாய்லாந்து நாட்டில் உள்ள பிரசுவாப் கிரி கான் மாகாணத்தில் அந்நாட்டின் போர்க்கப்பல் 'எச்டிஎம்எஸ் சுகோதாய்' 100-க்கும் மேற்பட்ட மாலுமிகளுடன் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட புயலில் சிக்கி அந்தக் கப்பல் கடலுக்குள் மூழ்கியது. 

இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 75 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 30 மாலுமிகள் மாயமானது தெரியவந்தது. 

இந்த மாலுமிகளை மூன்று போர்க்கப்பல்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஒரு மாலுமி உயிருடன் மீட்கப்பட்டார். 

அந்த மாலுமிக்கு தலையில் காயங்கள் இருந்ததாகவும், அவர் சுயநினைவில் இருநத்தாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து மாலுமி உயிருடன் மீட்கப்பட்ட இடத்தில் மேலும் சில மாலுமிகள் இருக்கலாம் என்று கருதிய மீட்பு குழுவினர் அந்த பகுதியில் மீட்பு பணிகளை வேகப்படுத்தினர்.

அப்போது அந்த பகுதியில் ஆறு மாலுமிகள் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும், காணாமல் போன 23 மாலுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tailand storm attack warship six Sailors rescue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->