துபாயின் புதிய இந்து கோவில் : நாளை முதல் திறப்பு..! - Seithipunal
Seithipunal


இன்று துபாய் நாட்டில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ளபுதிய இந்து கோவில் திறக்கப்பட உள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்தக் கோவில் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டு கோவிலை திறந்து வைக்க உள்ளனர். 

இந்த நாட்டில் ஏற்கெனவே அமைந்துள்ள சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கமே இந்த கோயில் ஆகும். சிந்தி குரு தர்பார் கோவிலானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும். 

துபாயின் புதிய கோவில் கட்டுவதற்கான அடித்தளம் பிப்ரவரி மாதம் 2020 ல் நாட்டப்பட்டது.  2 ஆண்டுகளுக்கு பின் அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்காக இந்த கோயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். 

இந்த கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்கிறது. இங்கு, வழிபாட்டாளர்கள் மற்றும் பிற பார்வையாளர்களுக்கு நுழைவதற்கும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்தக் கோவிலில் தினமும் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வழிபாடு செய்யலாம். 

இந்தக் கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு வசதியையும் செயல்படுத்தியுள்ளது. 

துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் பல தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாராக்கள் உள்ள நிலையில், துபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new hindu temple open in dubai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->