உலகில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இதுவரை 69 கோடி அதிகமானோரை தாக்கியுள்ளது. 

இதில் 69 லட்சத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வைரஸ் அடுத்தடுத்து மாறுபாடு அடைந்து புதிய வகை வைரஸாக மக்களை தாக்கி வருகிறது.

கொரோனாவின் வீரியம் சமீப காலங்களில் குறைந்து வரும் நிலையில் தற்போது புதிய வகை கொரோனா ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகை வைரஸுக்கு பி.ஏ. 2.86 என பெயரிடப்பட்டுள்ளது. 

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இந்த வைரஸின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. 

இது குறித்து அந்த மையம் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, கொரோனாவை உருவாக்கும் புதிய வகை வைரஸ் ஒன்றை சி.டி.சி கண்காணித்து வருகிறது. 

இந்த வகை வைரஸுக்கு பிஏ 2.87 என பெயரிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் குறித்து பல்வேறு தகவல்களை சேகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ள சி.டி.சி விரைவில் இது குறித்து செய்திகள் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

இந்த புதிய வகை வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று குஜராத் தலைநகர் காந்திநகர் தொடங்கிய ஜி20 நாடுகளின் சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் இந்த அமைப்பின் மருத்துவர் இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது, ''கொரோனா அனைத்து அம்சங்களும் ஆபத்தை எதிர்கொள்ளும் என்ற பாடத்தை நமக்கு கற்றுத் தந்தது. 

இந்த பாடத்தை வலி நிறைந்த காலத்தில் உலகம் அறிந்து கொண்டது. சமீபத்தில் கொரோனாவின் மாறுபாடு வைரஸ் ஒன்றை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. 

அதன் மாறுபாடு குறித்து தற்போது அனைத்து நாடுகளுக்கும் கண்காணிப்பை தொடர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது என மருத்துவர் தெரிவித்தார். 

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார மந்திரி உள்பட ஜி 20 நாடுகளின் சுகாதார மந்திரிகள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new type corona virus found


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->