ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டெரெஸ் அமெரிக்காவின் கைப்பாவை - வடகொரியா கண்டனம் - Seithipunal
Seithipunal


உலக நாடுகள் மற்றும் ஐநாவின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 18-ந் தேதி, அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதித்தது. 

இந்த வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசும் வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்தார். 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுப்பதை வடகொரியா உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். 

இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக வடகொரிய வெளியுறவு மந்திரி சோ சோன் ஹுய், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், ஐ.நா. சாசனத்தின் நோக்கம், கோட்பாடுகள் மற்றும் அனைத்து விஷயங்களிலும் பாரபட்சமற்ற தன்மை, சமத்துவம் ஆகியவற்றை பேணுவதற்கான தனது சரியான பணியை மறந்து, மிகவும் இழிவான அணுகுமுறையை ஐ.நா பொதுச்செயலாளர் எடுத்ததற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ஆண்டனியோ குட்டரெஸ் கவனிக்காதது, அவர் அமெரிக்காவின் கைப்பாவை என்பதை தெளிவாக நிரூபிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea says UN Secretary General America Puppet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->