கிழக்கு கடல் பகுதியை நோக்கி வடகொரியா 2 ஏவுகணை சோதனை.!! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. இது ஜப்பானின் பொருளாதார மண்டலத்தில் விழுந்ததாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையானது வடகொரியாவின் எதிர்த்தாக்குதல் திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று வடகொரியா அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அமெரிக்கா மற்றும் தென்கொரியாய் இணைந்து நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா இன்று குறுகிய தொலைவு செல்லக் கூடிய இரண்டு ஏவுகணைகளை கிழக்கு கடல் பகுதியில் நோக்கி சோதனை செய்துள்ளது. இதனை உறுதி செய்த தென்கொரியா, வடகொரியாவின் சுக்சோன் பகுதியில் இன்று காலை ஏழு மணி முதல் 7.11 மணிக்குள் ஏவுகணை சோதனை நிகழ்வை கண்டதாக தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் கொரியா தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea Tests 2 Missiles Towards East Sea Area


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->