தேசிய நலனை பாதுகாக்க தைரியமான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் - ஜப்பானுக்கு மிரட்டல் விடுத்த வடகொரியா.!
north korea threatens to jappan for take strong military against
வடகொரியா தனது பரம்பரை எதிரி நாடான ஜப்பானை பயமுறுத்தும் விதமாக தற்போது ஜப்பானை நோக்கி பல ஏவுகணைகளை ஏவி வருகிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டது. இதன் கீழ் வடகொரியா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தாக்குதல் திறனை அதிகரிப்பதற்கு ராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்குவதாக ஜப்பான் உறுதி அளித்துள்ளது.
ஜப்பானின் இந்த புதிய ராணுவ கொள்கைக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்து ஜப்பானுக்கு எதிராக வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "மற்ற நாடுகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக எதிர் தாக்குதல் திறனை மேம்படுத்துவது என்பது தற்காப்புடன் எந்த தொடர்பும் இல்லாத ஒன்று. ஜப்பான் தனது பேராசையைத் தீர்த்துக்கொள்வதற்கான ஒரு முட்டாள்தனமான முயற்சிதான் இது.
தற்காப்பு உரிமைகளை நியாயமான முறையில் செயல்படுத்துவது என்ற பேச்சுடன் அதன் ராணுவ படையெடுப்பு திறனைக் கட்டியெழுப்புவது நியாயப்படுத்தப்படவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது.
ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு கொள்கையால் எழுந்துள்ள பிரச்சனையில் இருந்து வடகொரியாவின் இறையாண்மை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க தைரியமான மற்றும் வலுவான ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
north korea threatens to jappan for take strong military against