அணு ஆயுத மிரட்டல்களை அணு ஆயுதங்களை கொண்டே பதிலடி தருவோம் - வடகொரியா
North Korea We will respond to nuclear threats with nuclear weapons
உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர் அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வடகொரியா நேற்று சுமார் 15 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை நடத்தியது.
இது அமெரிக்க எல்லையை தக்கும் திறன் கொண்டது என்று ஜப்பான் குற்றம் சாட்டிய நிலையில், வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங், அணு ஆயுத மிரட்டல்களை, அணு ஆயுதங்களை கொண்டே உறுதியுடன் எதிர்கொண்டு பதிலடி தருவோம் என்றும், போரை கொண்டே ஒட்டுமொத்த போரை எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அச்சுறுத்தல்கள், ஒரு பகைமை கொள்கையை தொடருவது ஆகியன, அணு ஆயுத தடையை எதிர்த்து பெரிய அளவில் சோதனை செய்ய தனது நாட்டை தூண்டியது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
North Korea We will respond to nuclear threats with nuclear weapons