வெடித்துச் சிதறியது வட கொரியாவின் உளவு செயற்கைக்கோள்..!! - Seithipunal
Seithipunal



சமீப காலமாக வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதன்மூலம் தென் கொரியாவை மிரட்டுவதற்காகவே வடகொரியா ஏவுகணை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே தொடர்ந்து கொரிய தீபகற்ப பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் வடகொரியா கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், விரைவில் இரண்டாவது செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று வடகொரியா அறிவித்தது.

இதையடுத்து வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து இரண்டாவது உளவு செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. ஆனால் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கைக்கோள் நடுவானில் வெடித்துச் சிதறியதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் அந்த செயற்கைக்கோள் கடலில் விழுந்ததாக தென்கொரியாவும் கூறியுள்ளது. இதற்கிடையே திரவ ஆக்சிஜன் மற்றும் பெட்ரோலிய இயந்திரத்தில் ஏற்பட்ட வெடிப்பே இந்த ஏவுகணை வெடிப்பிற்கு காரணம் என்று தேசிய விண்வெளி தொழில்நுட்ப நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Koriyas satellite got Burst out


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->