104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி - உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சம்பவம்.!
old lady guinnes record of sky diving in america
104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி - உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சம்பவம்.!
அமெரிக்கா நாட்டில் உள்ள சிகாகோ மாகாணத்தை சேர்ந்தவர் டொரோத்தி ஹாஃப்னர். 104 வயதான இவருக்கு ஸ்கை டைவிங் செய்வதில் நீண்ட நாட்களாகவே ஆர்வம் இருந்து வந்தது.
இதற்காக அவர் முறையான பயிற்சியும் பெற்று வந்தார். அப்போது, அதிகபட்ச உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனை படைக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்வீடனைச் சேர்ந்த 103 வயது லினியா இங்கேகார்ட் லாசன் என்பவர் ஸ்கை டைவிங் செய்து, உலகின் மிகவும் வயதான ஸ்கை டைவர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.
இந்த சாதனையை முறியடிக்க விரும்பிய டொரோத்தி, சிகாகோ பகுதியில் 85 மைல் தொலைவில் உள்ள விமான நிலையத்திலிருந்து விமான மூலம் வானிற்கு பறந்தார். அதன் பின்னர் சுமார் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்தார்.
அவருடன், ஸ்கை டைவிங் பயிற்சியாளர் ஒருவரும் உடன் இருந்தார். இதன் மூலமாக மிக அதிக வயதில் ஸ்கை டைவிங் செய்தவர் என்ற சாதனையை டொரோத்தி ஹாஃப்னர் படைத்துள்ளார்.
விரைவில், இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இந்த சாதனையின் மூலம் சாதனைக்கு வயது ஒரு தடை இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக, அவரது நண்பர்களும் உறவினர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
old lady guinnes record of sky diving in america