ரஷ்யா ஏவுகணை தாக்குதல் : உக்ரைனில் இடிபாடுகளில் சிக்கி 1 1/2 வயது குழந்தை உயிரிழப்பு.!
one and half years children died in ukraine for Russia missile attack
நேற்று முன்தினம் ரஷிய படைகள் உக்ரைன் நாட்டில் உள்ள கீவ், கார்கிவ் மற்றும் கிரிவி ரிஹ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதிலும் குறிப்பாக இந்த நகரங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா ஏவுகணைகளை வீசியது.
இந்த ஏவுகணை தாக்குதலில் சுமார் 60 ஏவுகணைகள் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டது. இருப்பினும் எஞ்சிய ஏவுகணைகள் மூன்று நகரங்களிலும் பல கட்டிடங்களை அழித்தது.
அதில் கிரிவி ரிஹ் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று தரைமட்டமானது. இந்தக் கட்டிடத்தில் பல ஆயிரகணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணிகள் இரவு, பகல் என்று தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று அதிகாலை கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒன்றரை வயதுடைய பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று பிணமாக மீட்கப்பட்டது. இதையடுத்து தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து கிரிவி ரிஹ் நகர அதிகாரிகள் தெரிவித்ததாவது, "ரஷியாவின் இந்த ஏவுகணை தாக்குதலுக்கு நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும், சிறுவர்கள் உள்பட பதின்மூன்று பேர் காயமடைந்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
English Summary
one and half years children died in ukraine for Russia missile attack