துருக்கி நிலநடுக்கம் - இடிபாடுகளில் சிக்கி 187 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஐரோப்பிய நாடான துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகி உள்ளது.

இதனால், துருக்கி-சிரியாவின் எல்லை நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. 

அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில், வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த மக்களில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால், துருக்கியில் 76 பேரும், சிரியாவில் 111 பேரும் என்று மொத்தம் 187 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

மேலும், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இன்னும் ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் அவர்களையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one hundrad and eighty seven peoples died for turkey earthquake


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->