சூடானில் மோதல் தீவிரம்: இந்தியர் உட்பட 270 பலி.! 2,600 பேர் காயம்..! - Seithipunal
Seithipunal


சூடானில் துணை ராணுவம் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட முதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.

ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில் கடந்த சில நாட்களாக ஆர்.எஸ்.எப் எனப்படும் தனிப்பட்ட துணை ராணுவ விரைவுபடையை ராணுவத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ராணுவம், ராணுவ படைகளுக்கு எதிராக தீவிர மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிர தாக்குதலில் பொதுமக்கள் பலர் பலியானார்கள்.

இதுவரை ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியர் உள்பட பலியானோரின் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2600 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமுக முடிவு ஏற்படாத நிலையில், இரு தலைவர்களும், தலைநகர் கார்டோம் மற்றும் பிற பகுதிகளை கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், அதனை பாதுகாக்கும் நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, சீனா, ரஷியா, ஐ.நா. அமைப்புகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு உடனடியாக தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one Indian including 270 killed and 2600 injured in sudan violence


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->