நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்.. பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமறைவு..!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பரிசுப்பொருட்களை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்தபோது கிடைத்த பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இம்ரான் கான் ஜாமீனில் கூட வெளிவர முடியாத வகையில் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனை அறிந்த இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அவர் இல்லத்தின் முன்பு கூடி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையும் மீறி பாகிஸ்தான் போலீசார் இம்ரான் கான் வீட்டிற்குள் சென்று தேடியபோது அவர் வீட்டிற்குள் இல்லாததால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்க திட்டமிட்டுள்ளனர். பரிசு பொருட்கள் விற்ற விவகாரத்தில் கைது நடவடிக்கைக்கு பயந்து பாகிஸ்தான் முன்னால் பிரதமர் இம்ரான் கான் தற்பொழுது தலைமறைவாக உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan former Prime Minister Imran Khan is absconding


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->