பாகிஸ்தான் :: இம்ரான் கான் கட்சிக்கு தடை... அரசு பரிசீலனை..! - Seithipunal
Seithipunal


பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் ராணுவத்தினரால் மே 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து நாடு முழுவதும் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர்.

மேலும் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்தவர்கள் பிரதமர் இல்லம், ராணுவ கமாண்டா் இல்லம், மியான்வாலி விமானத் தளம், ராணுவ தலைமையகம் மற்றும் ஐஎஸ்ஐ கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனிடையே கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மீது பாகிஸ்தான் ராணுவம் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பொது சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்திய தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளாா்.

மேலும் இம்ரான் கான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும் ராணுவ நிலைகளின் மீது தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சிக்கு முற்றிலும் தடைவிதிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan government considering banning Imran Khans party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->