பரபரப்பு! 9ம் வகுப்பு தேர்வில் தங்கை தோல்வி! ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டு கொன்ற அண்ணன்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தனது தங்கை தோல்வி அடைந்ததை அடுத்து தங்கையை அண்ணன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சஜிதா கணித தேர்வில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் தாய் உடன் தூங்கிக் கொண்டிருந்த தங்கையிடம் தோல்வி அடைந்தது குறித்து அண்ணன் அகில் உசேன் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சத்தம் கேட்டு விழுந்த தாய் சண்டையை நிறுத்துமாறு எச்சரித்துள்ளார். ஆனால் தாயின் பேச்சை கேட்காத உசைன்  தனது துப்பாக்கியை எடுத்து தங்கையை சுட்டு கொலை செய்த்தாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன் துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
தாயின் அழகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்  வந்து ரத்த வெள்ளத்தில் இருந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இந்த சம்பவம் மறைந்து மருத்துவமனை வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அவரது மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தப்பி ஓடிய உசைனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan his younger sister was shot dead by her younger sister after she failed in her ninth grade examination


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->