இன்னும் 3 நாட்கள் தான்.. முன்கூட்டியே ஆட்சியை கலைக்க முடிவு.!! வெளியான பரபரப்பு பின்னணி!!.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து பிற கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் ஆனார். 

அவர் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து பாகிஸ்தான் பிரதமராக முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஷ் ஷெரிப்பை பிரதமராக தேர்ந்தெடுத்தது.

இவர் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பி ஆவார். இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி, வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களால் அந்நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கருவூல மோசடி வழக்கில் தற்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க ஷெபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை பாகிஸ்தான் நாடாளுமன்ற பதவிக்காலம் உள்ள நிலையில் அவர் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க உள்ளதாகவும், பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்விக்கு ராஜினாமா கடிதம் எழுத உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

நாடாளுமன்ற பதவிக்காலம் நிறைவடைய 3 நாட்களே உள்ள நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைப்பதன் மூலம் தனது அரசியல் தந்திரத்தை அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் முன்னெடுக்க உள்ளார். பாகிஸ்தானைப் பொறுத்தவரை நாடாளுமன்றம் தனது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் பட்சத்தில் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.

அதற்கு முன்பு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதனால் தேர்தல் நடத்த ஆளும் கட்சிக்கு கூடுதலாக 30 நாட்கள் கிடைக்கும் என்பதால் 3 நாட்களுக்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்க பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Parliament dissolve prematurely


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->