வீட்டுவேலைக்கார ஆணை அந்த காரணத்திற்காக கரம்பிடித்த பணக்கார பெண்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் ஒரு பணக்காரப் பெண் தனது வீட்டில் வேலை செய்த இளைஞரை காதலித்து கரம் பிடித்து உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் பகுதியில் வசித்த நாசியா என்ற பெண் வீடு மற்றும் தோட்டத்தை பராமரிக்க ஒரு நபரை நியமித்து உள்ளார். சூபியான் என்ற அந்த நபர் மிகவும் விசுவாசமாக நாஸியா வீட்டை பராமரித்து வந்துள்ளார்.

 வீடு தோட்டம், அவர்களது நிலங்கள் அனைத்தையும் கவனமாக கையாண்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நாசியாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போதும் கூட அவர் நாசியாவை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். இதனால் நாசியாக்கு சூபியான் மீது காதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, இருவரும் பல ஆண்டுகள் நட்பாக பழகி வந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அந்தப் பெண்ணிற்கு வயது அதிகமாக இருந்த காரணத்தால் அங்கே திருமணம் செய்துகொள்ள கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்ட, அந்த தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து தனது கணவர் சூபியான் பெயருக்கு தனது அனைத்து சொத்துக்களையும் எழுதி தரப் போவதாக அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Women married her house keeping Men


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->