பொதுமக்களிடம் தங்கத்தை கடனாக கேட்டு கெஞ்சும் பாகிஸ்தான் பிரதமர்.!
Pakistan's Prime Minister gold loan from public
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு அன்னிய செலவாணி கையிருப்பு அதிகரிக்க பொதுமக்களிடம் இருந்து தங்கத்தை கடனாக வாங்க முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி அந் நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு 17 பில்லியன் டாலர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நிதி அமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வர்த்தக வங்கிகள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து தங்கத்தை டெபாசிட் பெற முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் அந்நியச் செலவாணி கையிருப்பு உயர்த்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு மக்கள் தங்கத்தை டெபாசிட் செய்வார்களா.? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary
Pakistan's Prime Minister gold loan from public