வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு - டாலருக்கு எவ்வளவு?. - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனாத் தொற்றில் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து முன்னேறி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாடு மட்டும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதனால், அங்கு உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், எரிபொருள் தடுப்பாடு, விலைவாசி உயர்வு என்று பல்வேறு பிரச்சினைகளை அந்த நாடு சந்தித்து வருகிறது. 

இந்த பொருளாதார நெருக்கடியை, சமாளிப்பதற்கு பாகிஸ்தான் நாடு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்பட சர்வதேச நிதி அமைப்புகளிடம் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

இந்த சூழலில், அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது, ஒரு அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் 262.6 ரூபாயாக உள்ளது.

 இந்த ரூபாயின் வீழ்ச்சி பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பின்நோக்கி தள்ளி உள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள மக்கள் மிக்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakisthan currency 262 rs plungs to america dollar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->