காசா முழுவதும் பவர் கட்! இஸ்ரேல் செய்த சம்பவத்தால் பதறும் பாலஸ்தீனம்! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினரிடையே கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3,000-த்தை கடந்துள்ளது. காசா எல்லையை கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் முலம் காசாவை இஸ்ரேல் ராணுவம் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது லெபனான் மீதான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதன் காரணமாக மின்உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் காசா நகரிலிருக்கும் லட்சக்கணக்கானோர் உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி தவித்து வரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்க உதவியுடன் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதால் காசா, லெபனானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனால் பாலஸ்தீன அரசு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழு இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palestine calls on world nations to end Israel Hamas war


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->