குவாட் உச்சி மாநாடு - பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ள 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. 

அதன்படி, இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நாளை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அமெரிக்கா நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார். 

இதற்காக அவர் நாளை அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த உச்சி மாநாட்டில் ரஷியா-உக்ரைன் மோதல், மேற்கு ஆசியா பதற்றம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய நிலவரம் உள்ளிட்ட சர்வதேச சவால்கள் குறித்து தலைவர்கள் விரிவாக விவாதிக்க உள்ளனர். 

அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளார். 

இந்த குவாட் உச்சி மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நடைபெறும் எதிர்காலத்துக்கான உச்சிமாநாட்டில் 23-ந்தேதி உரையாற்ற இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi going to america for qwat conference


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->