பிரான்சில் இந்தியாவின் UPI-ஐ பயன்படுத்தலாம் - பிரதமர் மோடி தகவல்.!
PM modi inform india UPI will be used in france
பிரான்சில் இந்தியாவின் UPI-ஐ பயன்படுத்தலாம் - பிரதமர் மோடி தகவல்.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், செனட் சபை தலைவர் உள்ளிட்டோரைச் சந்தித்தார். அதன் பின்னர் பிரான்சில் வசித்து வரும் இந்திய மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர், "இந்தியாவின் பணபரிமாற்ற சேவையான UPI-ஐ இனிமேல் பிரான்சிலும் பயன்படுத்தலாம் என்றும், இந்தியா- பிரான்ஸ் UPI பயன்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த முறை பிரான்சின் ஈபிள் டவரில் இருந்து தொடங்கப்படும்.
இதனால் சுற்றுலா செல்லும் மக்கள் கையில் பணத்துடன் செல்ல வேண்டாம். UPI பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம். இந்தியாவின் UPI பல வங்கி கணக்குகளை ஒற்றை மொபைல் பயன்பாடு அதாவது (சிங்கிள் மொபைல் அப்ளிகேசன்) மூலம் எளிதாக பயன்படுத்த முடியும்.
கடந்த 2016-ம் ஆணடு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையை தொடங்கியது. தற்போது அது நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2022-ல் என்.பி.சி.ஐ. பிரான்ஸ் உடன் வேகம் மற்றும் பாதுகாப்பு ஆன்லைன் பணபரிவர்த்தனை சிஸ்டம் உள்ளிட்டவைத் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது..
அதற்கு "லைரா" எனப் பெயரிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த வருடம் சிங்கப்பூர் PayNow உடன் பயனர்கள் நாடு கடந்த பரிவர்த்தனைக்கு அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்துள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
PM modi inform india UPI will be used in france