ரஷ்யா - உக்ரைன் போர்.. ரஷ்ய அதிபருக்கு பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்.!!
pm modi speaks with russian president
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி தாக்குதல், கடல்வழி மற்றும் தரைவழி என முப்படைகள் படைகளின் தாக்குதலை நடத்துவதால் பெரும் சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ தளங்களை ரஷ்ய படைகள் தாக்கி அழித்து உள்ளது. அதேபோல தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
ரஷ்யா தொடுத்துள்ள போரை நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக இந்திய அதில் தலையிட்டு போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியா தலையிடவேண்டும். ரஷ்ய அதிபர் புதின் இடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் விளக்கமளித்துள்ளார்.
English Summary
pm modi speaks with russian president