500 ஏர்பஸ் விமானங்களை வாங்க இண்டிகோ ஒப்பந்தம்..! பிரதமர் ரிஷி சுனக் பாராட்டு - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸுடன் 500 ஏ320 வணிக விமானங்களை வாங்க இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்படி, 500 ஏர்பஸ் விமானங்கள் 2030-லிருந்து 20035-க்குள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் ஏ320 விமான இஞ்சின்கள் இதற்கு முன்பு வெளியான ஏ320 நியோ, ஏ321 நியோ வின் கலவையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் இண்டிகோ மற்றும் இங்கிலாந்தின் ஏர்பஸ் இடையிலான ஒப்பந்தம் இங்கிலாந்து விமானத் துறைக்கு கிடைத்த வெற்றி என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, இண்டிகோ - ஏர்பஸ் இடையிலான ஒப்பந்தம் ஒரு வரலாற்று சிறப்புமிக்கது. இது இங்கிலாந்து விமான துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதன் மூலம் இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பில் தயாரிக்கப்படும் இந்த விமானங்கள் நவீன மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட உள்ளதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm Rishi Sunak hails IndiGo Airbus pact as major win for UK aerospace


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->