விவசாயிகளின் நலன்: இறக்குமதி உணவுப் பொருட்களுக்கு தடை.! போலந்து அரசு அதிரடி.!
Poland bans import from ukraine for local farmers good
ஐரோப்பிய நாடான போலந்தில் உள்நாட்டு உற்பத்தி தானியங்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், விவசாய துறையை பாதுகாக்க அண்டை நாடான உக்ரைனிலிருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை போலந்து அரசு தடை செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து கருங்கடல் வழியாக உக்ரைனின் தானிய ஏற்றுமதி தடைபட்டது. பின்பு ஐ.நாவின் முயற்சியால் கருங்கடல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வழியாக தானிய ஏற்றுமதி நடைபெற்றது. இதையடுத்து உக்ரைனின் தானியங்கள், தேன், முட்டை, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய அதிகளவு செலவு செய்யவேண்டியிருக்கிறது.
இந்நிலையில் உலர் தானியங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், விவசாய மக்களின் நலன் கருதியும் உக்ரைனின் தானியம் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போலந்து அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக போலத்தின் ஆளும் கட்சியின் மூத்த தலைவர் காசிஸ்கி கூறும்பொழுது, உக்ரைன் நட்பு நாடாக இருந்தாலும், உள்நாட்டு மக்களின் நலன்களை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் போலந்தில் தேர்தல் நடைபெற இருப்பதால் மக்களை ஈர்க்கவே ஆளும் அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே போலந்தை தொடர்ந்து ஹங்கேரியும், உக்ரைனிலிருந்து தானியை இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.
English Summary
Poland bans import from ukraine for local farmers good