உக்ரைனுக்கு MiG-29 ரக போர் விமானங்கள் வழங்க போலந்து முடிவு.!! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகள் ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றன. இந்த ஆயுத உதவிகள் மூலம் நகரங்களின் மீதான ரஷ்யாவின் பல்முனை தாக்குதலை உக்ரைன் சமாளித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், ரஷ்ய தாக்குதலை சமாளிக்க போர் விமானங்கள் வழங்குமாறு நேட்டோ அமைப்பு மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனுக்கு நான்கு மிக் -29 ரக போர் விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக போலந்து அதிபர் ஆன்ட்ரேஜ் டுடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், போலந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஜெர்மனியில் இருந்து பெறப்பட்ட மிக் -29 ரக விமானங்கள் வரும் நாட்களில் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்றும், உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்குவதில் நேட்டோ அமைப்பு நாடுகளில் போலந்து முன்னணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் கோரிக்கையை ஏற்று போர் விமானங்களை அனுப்பும் முதல் நேட்டோ நாடு போலந்து என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poland decided to give 4 mig 29 warplanes to ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->