கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய ஓய்வுபெற்ற போலீசார்.. 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குள் புகுந்த ஓய்வு பெற்ற போலீசார் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் 22 குழந்தைகள் உட்பட 34 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நோங் புவா லாம்புவில் இயங்கி வரும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று காலை கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அதன்படி, இன்று குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு வந்த ஓய்வு பெற்ற போலீஸார் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் 22 குழந்தைகள் உட்பட 34 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளார்.

இவர் கடந்தாண்டு போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police gun shoot in Thailand 34 peoples death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->