பிரேசிலில் நீடிக்கும் அரசியல் குழப்பம்.! தோல்வியை ஏற்க மறுக்கும் அதிபர்.!
Political turmoil in Brazil as president refuses to accept defeat
தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்த தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் மற்றும் தற்போதைய அதிபருமான ஜெய்ர் போல்சனார்ரோவை இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தோற்கடித்தார்.
தேர்தலில் இருவருக்கும் இடையே வெற்றி வித்தியாசம் வெறும் இரண்டு சதவீத புள்ளிகளுக்கும் குறைவாக இருந்ததால், ஜெய்ர் போல்சனார்ரோ ஆதரவாக நாடு முழுவதும் அரசியல் குழப்பங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பிறகு முதல் முறையாக அதிபர் ஜெய்ர் போல்சனார்ரோ தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் ராணுவ படைகள் பிரேசில் மக்களுக்கு விசுவாசமாகவும், அரசியல் சாசனத்திற்கு கடமைப்பட்டுள்ளனர் என்பதால் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்படும் என்றும், லூலாவை பதவியேற்க அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Political turmoil in Brazil as president refuses to accept defeat