இங்கிலாந்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்: ஆறுகள், குளங்கள் வற்றும் அபாயம்
Ponds dry due to extreme heat in england
கடந்த சில வாரங்களாக காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பா நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது.
மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் பெற்ற லண்டன் போன்ற நகரங்கள் அதிக வெப்ப அலையை எதிர்கொள்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் போதுமான அளவு மழை இல்லாமல் அதீத வெப்பமும், வறண்ட காலநிலையும் நிலவி வருவதால் இங்கிலாந்தில் சில பகுதிகள் வறட்சியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அதிக வெப்பநிலை தொடர்ந்து நிலவிவருவதால், புற்கள் பழுப்பு நிறத்தில் கானப்படுகின்றன. மேலும் ஆறுகளில் நீரோட்டம் குறைந்து காணப்படும் நிலையில், ஒரு சில குளங்கள் முற்றிலும் வற்றிய நிலையில் காணப்படுகின்றன.
இந்நிலையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் எட்டிய நிலையில் ஏற்கெனவே வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருந்த பகுதிகள் தற்போது மோசமான நிலையை எட்டியுள்ளதாக இங்கிலாந்து சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
Ponds dry due to extreme heat in england