கேமேன் தீவில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
Powerful earthquake in Cayman Islands
கேமேன் தீவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5 பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது என அஞ்சப்படுகிறது. அதாவது, , அதிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும்போது, பூமியின் மேற்பரப்புக்கு வருவதற்குள் ஆற்றலை அது இழந்து விடும்.

ஆனால், பூமியின் மேற்பரப்பு பகுதியில் ஏற்படும் நிலநடுக்கம் அதிக ஆற்றலுடன் நிலப்பகுதிகளை தாக்குவதற்கான சாத்தியம் உள்ளது. இதனால், கட்டிடங்களுக்கும் மக்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன், கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அதனை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், கடலை ஒட்டி உள்ள பியூர்டோ ரிகோ, அமெரிக்க விர்ஜீன் திவுகள், ஹோண்டுராஸ், சில கரீபியன் நாடுகளில் சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியிருந்தது. இதனால், கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச சுனாமி தகவல் மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கத்தால், அடுத்த 03 மணி நேரத்தில் கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பஹமாஸ், ஹைதி, துர்க்ஸ், கைகோஸ், டாமினிகன் குடியரசு, கொலம்பியா, பனாமா, பியூர்டோ ரிகோ, கோஸ்டா ரிகா, அமெரிக்க விர்ஜின் தீவு, பிரிட்டன் விர்ஜின் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி தாக்கலாம் எனக்கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திபெத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.07 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
English Summary
Powerful earthquake in Cayman Islands