ஜப்பானை சூறையாடிய சக்தி வாய்ந்த புயல்.! ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்.! - Seithipunal
Seithipunal


கிழக்கு சீன கடலில் உருவான சக்தி வாய்ந்த நான்மடோல் புயல் ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை பலமாக தாக்கியுள்ளது. புயலினால் மணிக்கு 162 கி.மீ வேகத்திற்கு மேல் பலத்த காற்று வீசியதில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சரிந்தன.

மேலும் இந்த புயலினால் கடலில் பல அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகள் கடலோர பகுதியை தாக்கியுள்ளன. இடைவிடாமல் பெய்த கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கியாஷூ தீவில் பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ள மின்தடையால் 350000 வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் தகவல் தொடர்பு, குடிநீர் வினியோகம், ரயில் போக்குவரத்து மற்றும் படகு சேவைகள் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புயலினால் ஒருவர் உயிரிழந்த நிலையில் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Powerful typhoon Nanmadol hits Japan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->