பிரேசிலில் சோகம்.! கர்ப்பிணி பெண்ணுக்கு எமனாக வந்த மின்சாரம் - குழந்தையின் நிலை? - Seithipunal
Seithipunal


பிரேசிலில் சோகம்.! கர்ப்பிணி பெண்ணுக்கு எமனாக வந்த மின்சாரம் - குழந்தையின் நிலை?

பிரேசில் நாட்டில் பாரைபா மாகாணத்தில் உள்ள மான்டே காஸ்டெலோ நகரத்தில் வசித்து வந்தவர் ஜெனிபர் கரோலெய்ன். நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 17-ம் தேதியன்று காலையில் குளித்து முடித்துவிட்டு வந்து பார்த்தபோது அவரது செல்போன் சார்ஜ் இல்லாமல் கிடந்துள்ளது. 

உடனே அவர் ஈரத்துடன் தனது போனை சார்ஜ் போட முயன்றுள்ளார். அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இந்தச் சத்தம் கேட்டு ஓடிவந்த அவருடைய கணவர் விழுந்து கிடந்த மனைவியை உடனடியாக தூக்க முயன்றுள்ளார். 

ஆனால், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து அவர் அவசர உதவியை அழைத்துள்ளார். அதன் படி போலீஸாருடன் வந்த அவசர உதவிக்குழுவினர் மின்சாரத்தை துண்டித்து ஜெனிபரை மீட்டனர்.

பின்னர் ஜெனீபரை பரிசோதனை செய்ததில், அவரும், வயிற்றிலிருந்த 9 மாத குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்க இருந்த நிலையில், கர்ப்பிணி பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnent lady died in brezil for electric shock attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->