பாகிஸ்தான் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய "ஆடியோ மெசேஜ்" : நடந்தது என்ன?   - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தலைமையிலான தெஹ்ரீக்  இ இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி என்பவர், சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "அரசின் உயர் அதிகாரியிடம், இந்தியாவில் இருந்து மின் உலைக்கான இயந்திர இறக்குமதிக்கு, தன் மருமகனான ரஹீல் என்பவருக்கு சில விதிமுறைகளை புறக்கணித்து உதவும்படி" கேட்டுள்ளார்.

அதற்கு அந்த அதிகாரி, 'விதிமுறையை மீறி இப்படி செய்தால், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு செல்லும்போது, உண்மை தெரிந்து விடும். மேலும், இது அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்' என்று பதில் அளித்துள்ளார்.

இந்த ஆடியோவை சமூக வலைதளத்தில் ஏராளமானோர் பகிர்ந்து, பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த ஆடியோ, பாகிஸ்தான் அரசியலில் குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president Shebaz Sharif heare help higher officer for son in law


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->