அதிபர் தேர்தல் : ட்ரம்ப் வெற்றி!
Presidential election trump wins
உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று காலை நிறைவு பெற்றது. இந்த தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களம் கண்டனர்.
அங்கு ஒட்டு மொத்தமாக 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 7 கோடிக்கும் அதிகமானோர் முன்கூட்டியே தங்கள் வாக்கினை செலுத்தி உள்ளனர்.
மேலும் , கமலா ஹாரிஸ் இ-மெயில் மூலம் தனது வாக்கினை செலுத்தி உள்ளார். நேற்று தனது மனைவியுடன் வாக்கினை செலுத்திய டிரம்ப், தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் வன்முறையில் ஈடுபட போவதில்லை என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் நேற்று தொடங்கிய வாக்குப்பதிவு இன்று காலை வரை நடைபெற்று நிறைவு அடைந்த நிலையில், வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 246 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் டிரம்ப் அதிபராவதற்கு இன்னும் 24 வாக்குகள் தேவைப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Presidential election trump wins