சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடிக்கு 21 குண்டுகள் முழங்க சிறப்பு வரவேற்பு...!!!
Prime Minister Modi receives special welcome 21 gun salutes visit Saudi Arabia
பிரதமர் மோடி இன்று டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சவுதி அரேபியா புறப்பட்டார்.இவர் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும், பிரதமர் மோடியின் விமானம் சவுதி அரேபியா எல்லையில் நுழைந்தபோது அந்நாட்டு அரசு சார்பில், எப்-15 ரக போர் விமானம் மூலம் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றார். அப்போது பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பாக 21 குண்டுகள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்மூலம் கடந்த 40 ஆண்டுகளில் ஜெட்டா நகரம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றார்.மேலும், இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது குறித்த முழு தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Prime Minister Modi receives special welcome 21 gun salutes visit Saudi Arabia