கல்லூரி மாணவிகளின் மேலாடைகளை அகற்ற கூறிய பேராசியர் பணியிடை நீக்கம்.!
professer arrested for told remove dress to students in america
கல்லூரி மாணவிகளின் மேலாடைகளை அகற்ற கூறிய பேராசியர் பணியிடை நீக்கம்.!
அமெரிக்கா நாட்டில் உள்ள வாஷிங்டன் டி.சி. தக்கோமா பகுதியில் மோண்ட்கோமெரி என்ற கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு படித்து வந்த மாணவிகளில் 11 பேரின் மேலாடையை கழற்றி விட்டு விளையாட்டுக்கான உள்ளாடையுடன் இருக்கும்படி பேராசிரியர் ஒருவர் வலியுறுத்தி உள்ளார்.
அதன் பின்னர் அந்த பேராசிரியர் மாணவிகளின் மார்பகங்களை பற்றி முறையற்ற விமர்சனங்களையும் கூறியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் படி குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியரிடம் விசாரணை நடத்தியதில், அது மருத்துவ ஆய்வுடன் தொடர்புடையது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆடைகளை களைய வேண்டிய தேவையோ அல்லது விமர்சனங்களை வெளியிட வேண்டிய தேவையோ இல்லாத நிலையில், அந்த பேராசிரியர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, நடந்து கொண்டது கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, மூன்று ஆண்டுகள் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. அதிலும் குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற தீவிர விசாரணையில், இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அந்த பேராசிரியர் ஆய்வகத்தில் அணியும் மேலாடையை அணிந்து உள்ள சில மாணவிகளையும் ஆடைகளை நீக்கும்படி தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் தீவிர விசாரணைக்கு பின்னர் முதலில், அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து அவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
English Summary
professer arrested for told remove dress to students in america