ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கையை எதிர்த்து பிரான்ஸில் தொடரும் போரட்டம்.!! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கடந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வூதிய சீர்திருத்தத்த நடவடிக்கையாக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 64 வரை உயர்த்துவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற 7வது நாள் போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும், சீர்த்திருத்தக் கொள்கையை திரும்பப்பெறுமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தலைநகர் பாரிசில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகரப் போக்குவரத்து முடங்கியதால் காவல்துறையினர் போராட்டங்களை கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் முகமூடி அணிந்து பட்டாசை கொளுத்தியும், வாகனங்களை நொறுக்கியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் கண்ணீர் புகை கொண்டு வீசியும், தண்ணீர் பாய்ச்சியும் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Protest against pension policy continued for 7th in france


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->