பிரதமர் மோடியின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கு புடின் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


மாஸ்கோவில் வால்டாய் கிளப் மாநாட்டில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை 'உண்மையான தேசபக்தர்' என்றும், பிரதமர் மோடியின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் 'மேக் இன் இந்தியா' என்ற தொலைநோக்கு பார்வையைப் பாராட்டினார்.

எந்த முயற்சியும் இன்றி, தனது சொந்த நாட்டு மற்றும் மக்களின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றக்கூடிய உலகின் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர்.

இந்தியாவுடன், ரஷியாவிற்கு சிறப்பான உறவு உள்ளது. இது பல தசாப்தங்களாக நெருங்கிய நட்பால் உருவாக்கப்பட்டது. நாங்கள் ஒருபோதும் கடினமான சிக்கல்களை எதிர்கொண்டதில்லை, ஒருவருக்கொருவர் ஆதரவளித்தோம். அது இப்போது நடக்கிறது, எதிர்காலத்தில் இது நடக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா-ரஷ்யா இடையே பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இந்திய விவசாயத்திற்கு மிகவும் முக்கியமான உரங்களின் விநியோகத்தை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு நாங்கள் அளவை 7.6 மடங்கு அதிகரித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Putin praises Prime Minister Modi independent foreign policy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->