சுவீடன், பின்லாந்து நேட்டோ படைகளை வரவேற்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.! புதின் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


சுவீடன், பின்லாந்து நேட்டோ படைகளை வரவேற்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பின் செயல்பாடு காரணமாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்களாக இணைய விரும்பின. இதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் மேட்ரிட் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்விரு நாடுகளும் ஆலோசனைகள் மேற்கொண்டன. இதனை தொடர்ந்து துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது என்று துருக்கியின் அதிபர் டயீப் எர்டோகன் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து துருக்கியின் எதிர்ப்பு விலகிய நிலையில் ஸ்வீடன், துருக்கி மற்றும் பின்லாந்து என முத்தரப்பு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துருக்கிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், நேட்டோவில் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இணைவது பற்றி ரஷ்யா கவலை கொள்ளவில்லை. ஆனால், இதற்கு முன்வரை அந்த பகுதிகளில் இருந்து அச்சுறுத்தல் எதுவும் இல்லை. 

அந்த பகுதிகளில் ராணுவ படைகள் குவிக்கப்பட்டாலோ அல்லது ராணுவ உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டாலோ, எங்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடப்பட்டால், அதற்கு எங்கள் தரப்பில் இருந்து பதிலடி தரப்படும் என்று ரஷ்யா அதிபர் புதின் துர்க்மெனிஸ்தானில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Putin warns Sweden and Finland if welcomes NATO forces


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->