சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா!...சுந்தர் பிச்சை புகழாரம்! - Seithipunal
Seithipunal


டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார்.  

இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பக்கத்தில், இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்க ரத்தன் டாடா ஆழ்ந்த அக்கறையுடன் இருந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் கடைசியாக ரத்தன் டாடாவை சந்தித்து பேசும் சந்தர்ப்பம் அமைந்ததாக தெரிவித்துள்ள அவர்,  வெய்மோவின் முன்னேற்றம் பற்றி இருவரும் உரையாற்றியதில், அவருடைய தொலைநோக்கு பார்வை கேட்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததாக  தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா ஒரு அசாதாரண வர்த்தகம் மற்றும் கொடைத்தன்மைக்கான மரபை விட்டு சென்றிருப்பதாகவும்,  இந்தியாவில் நவீனத்துவ தொழிலை வழிநடத்தி செல்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஏதுவாக உதவியாக இருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.  அவருடைய அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்றும்,  ரத்தன் டாடாவின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ratan tata was the one who cared about making a better india sundar pichai is praised


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->