தேர்தல் ஒத்தி வைப்புக்கு வாக்கெடுப்பு.. இலங்கையில் கோரிக்கை..!!Polling - Seithipunal
Seithipunal



இலங்கையில் இந்த வருடம் அதிபர் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இலங்கை அதிபராக இருக்கும் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலை மேலும் இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இலங்கை மாபெரும் பொருளாதார சீர்கேட்டில் சிக்கியுள்ளது. அதில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க தற்போதைய இலங்கை அதிபர் விக்ரமசிங்கே நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தேர்தல் நடத்தினால் அது அதிபர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாதிக்கும்.

மேலும் கடினமான நிலையில் இலங்கையை தள்ளும். எனவே மேலும் இரண்டு வருடங்களுக்கு அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால் இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பளிதா ரங்கே "பொருளாதார சீரமைப்புக்காக இலங்கை அரசு உலக வங்கி மற்றும் சில நன்கொடையாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்கவே அதிபர் தேர்தலை 2 ஆண்டுகள் ஒத்தி வைக்க கோருகிறோம்" என்று விளக்கமளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Requested for Polling in SriLanka to Postpone Election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->