அமெரிக்காவில் இந்து கோவில் உண்டியலை ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரசோஸ் பள்ளத்தாக்கில் பிரபலமான ஸ்ரீ ஓம்கர்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்து சமூகத்திற்காக அப்பகுதியில் இருக்கும் ஒரே இந்து கோவில் இதுவாகும். இங்கு பிரசோஸ் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து இந்து மக்கள் வழிபாட்டிற்காக தினமும் ஸ்ரீ ஓம்கர்நாத் கோவிலுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 11-ம் தேதி இரவு கோவிலின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கோவிலின் உண்டியல் மற்றும் நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வைத்திருந்த பாதுகாப்பு பெட்டகத்தையும் எடுத்துச் சென்றனர்.

இது தொடர்பாக கோவில் நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீநிவாஸ சுங்கரி, பாதுகாப்பு கேமராக்களால் படம்பிடிக்கப்பட்ட வீடியோவில் கொள்ளையர் ஒருவர் நன்கொடை பெட்டிக்கு நேராக சென்றதாகவும், கோவிலின் வாகனத்தை பயன்படுத்தி பெட்டியை கோவிலுக்கு வெளியே தள்ளியதாகவும் தெரிவித்துள்ளார்.

இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி இந்து சமூகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பிரசோஸ் பகுதி காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Robbers steal hundial in Hindu temple in america


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->